அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை.! புதுக்கோட்டை பெண் காவலர் வெளியிட்ட அசத்தல் வீடியோ..!
பெண் காவலர் சசிகலா என்பவர் சிறுமிகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது.
இருந்தபோதிலும், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. இந்தநிலையில் பெண் காவலர் சசிகலா என்பவர் சிறுமிகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் காவலர் சசிகலா. இவர் தனது திருமணத்திற்குப் பிறகு பணிமாற்றம் செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பாடிய சிறுமிகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்,பெண் காவலர் சசிகலாவை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர் பாடிய பாடலை பாராட்டி சிடி யாக வெளியிட்டார். பெண் காவலர் சசிகலாவுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.