2023 ஆம் ஆண்டில் பெண்கள் பாதுகாப்பில் முன்னிலை வகித்த மாவட்டம் எது தெரியுமா.?
2023 ஆம் ஆண்டில் பெண்கள் பாதுகாப்பில் முன்னிலை வகித்த மாவட்டம் எது தெரியுமா.?
கடந்த 2023 ஆம் ஆண்டு எந்த பகுதியில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற கருத்து கணிப்பை தனியார் நிறுவனமான அவதார் குழுமம் சார்பாக கருத்து கணிப்பு நடைப்பெற்றது. அதில் அதிக வாக்குகளை பெற்று சென்னை முதலிடம் வகித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தில் கோவை மாவட்டம் 9 வது இடத்தையும், மதுரை 11 வது இடத்தையும் பிடித்துள்ளது. அதனை போல் பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும் கருத்து கணிப்பு நடைப்பெற்றது.
அதில் மொத்தம் 64 நகரங்களில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அதில் திருச்சி முதலிடமும், வேலூர் இரண்டாவது இடத்தையும், சேலம் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.