பாவி மகள் இப்படி பண்ணிட்டாளே..! ஆசையாக முதலிரவு ஏற்பாடு செய்த பெற்றோர்.! இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பூச்சிக்குடிவயல் கிராமத்தை சேர்ந்த பவுன்துரை என்பவருக்கும், பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி என்ற இளம் பெண்ணிற்கும் கடந்த மார்ச் மாதம் 24- ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னதாக ரஞ்சனி ஏற்கனவே ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.
ரஞ்சனியின் காதல் விஷயம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால் ரஞ்சனியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் ரஞ்சனி தான் போலீஸ் வேலைக்கு தேர்வாகி உள்ளதாகவும், கர்ப்பம் அடைந்தால் பயிற்சிகளில் ஈடுபட முடியாது என கூறி ஒரு மாதமாக ரஞ்சனி முதலிரவுக்கு மறுத்து வந்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது அங்கு பிணமாக கிடந்தது ரஞ்சனி என தெரியவந்தது. முதலிரவுக்கு கட்டாயப்படுத்தியதால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.