ஜே.கே ரித்தீஷ் இறந்து ஒரு மாதத்திற்குள் அவரது மனைவி மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
Worker complaint against to JK ritheesh wife
அரசியல், சினிமா என பலதுறைகளில் பிரபலமாக இருந்தவர் மறைந்த நடிகர் JK ரித்தீஷ். சமீபத்தில் RJ பாலாஜி நடிப்பில் வெளியான LKG படத்தில் நடித்திருந்த இவர் கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இந்நிலையில் அவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவரது மனைவி ஜோதீஸ்வரி மீது அவர் வீட்டில் வேலை செய்துவரும் கேசவன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள புகாரில், சுமார் இருபது வருடங்களாக தான் ஜேகே ரித்தீஷ் உடன் இருந்து வருவதாகவும், தியாகராய நகரில் உள்ள ஒரு வீட்டில் தான் தங்கி இருப்பதாகவும் அந்த வீட்டை பராமரித்து கொண்டு அங்கேயே இருக்குமாறு JK ரித்தீஷ் தன்னை கேட்டுக்கொண்டதாகவும் கேசவன் கூறியுள்ளார்.
மேலும் அந்த வீட்டிற்கு பராமரிப்பு பணிகள் செய்த வகையில் தனக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை ரித்தீஷ் தர வேண்டியுள்ளது என்றும் கேசவன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரித்தீஷ் காலமானதை தொடர்ந்து ரிதீஷின் மனைவி ஜோதீஸ்வரி தன்னை அந்த வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறினார். அந்த நான்கு லட்சம் ரூபாயை கொடுத்தால் நான் உடனே காலிசெய்வதாக தெரிவித்ததாகவும் கேசவன் கூறியுள்ளார்.
ஆனால், பணம் தராமல் ஐசரி கணேசன் என்பவர் செல்போனில் தன்னைத் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும் வீட்டை ஜோதீஸ்வரியிடம் கொடுத்து விட்டு ஓடிவிட வேண்டும் என்று கூறியதாகவும் கேசவன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், ஜோதீஸ்வரி தன்னை தவறான வார்த்தைகளில் பேசியதாகவும், கொலை செய்துவிடுவதாக மிரட்டியாகவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கேசவனின் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் கணேசன் மற்றும் ஜோதீஸ்வரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.