×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எங்களை தனியே தவிக்க விட்டு சென்று விட்டாயே.. கணவன் கண்ணெதிரே இறந்த மனைவி.. மனமுடைந்த கணவனின் விபரீத முடிவு..!

எங்களை தவிக்க விட்டு சென்று விட்டாயே.. கணவன் கண்ணெதிரே இறந்த மனைவி.. மனமுடைந்த கணவனின் விபரீத முடிவு..!

Advertisement

கடலூர் மாவட்டம் உண்ணாமலை செட்டி சாவடி பனங்காட்டு காலனியில் வசித்து வருபவர்கள் குணசேகரன் - பவானி தம்பதியினர். குணசேகரன் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குணசேகரன் தனது மனைவி பவானி மற்றும் குழந்தை கௌதம் ஆகியோருடன் கடலூர் சில்வர் பீச்சிற்கு சென்றுள்ளார்.

அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த பவானி கணவன் மற்றும் குழந்தை கண்ணெதிரே கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு உயிர் இழந்தார். இதனையடுத்து தனது கண் எதிரே மனைவி அலையில் இழுத்துச் செல்லப்பட்டு  உயிரிழந்த சம்பவம் குணசேகரனை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் மாற்றியது. இதனால் குணசேகரன் வேலைக்குச் செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் சாவடி பேருந்து நிறுத்தத்திற்கு வந்த குணசேகரன் தனியார் பேருந்து புறப்படும் நேரத்தில் பேருந்து முன் விழுந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tragic decision #Men died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story