பட்டாசு தடையை மீறினால் ஆறுமாதம் சிறை, 1000 ரூபாய் அபராதம்! எச்சரிக்கும் காவல்துறை.
You will be jailed if you not obey diwali court orders
இந்தியாவில் விமர்சியாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஓன்று தீபாவளி. அதுவம் தமிழகத்தில் கேட்கவே தேவை இல்லை. அந்த அளவிற்கு தீபாவளி மிகவும் சிறப்பான ஒரு பண்டிகை. தீபாவளி என்றாலே புது படம், புது துணி, இனிப்பு பலகாரங்கள் மற்றும் விதவிதமான வெடி தான் நமக்கு நினைவிற்கு வரும்.
ஆனால் தீபாவளி சந்தோசத்தை குறைக்கும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியது உயர் நீதி மன்றம். அதாவது தீபாவளி சமயங்களில் இரண்டு மணிநேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், மீறுபவர்களை காவல் துறை கைது செய்யலாம் என்றும் அறிவித்திருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்தில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் படி, தமிழகத்தில் காலை 6-7 மணி வரை, இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். தமிழக அரசு அனுமதித்துள்ள இந்த 2 மணி நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் ஜெயில் அல்லது 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும் என அந்த சுற்றைக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு கொடுக்காமல் சட்ட விரோதமாக பட்டாசு வெடித்ததாக டெல்லியில் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் நேரக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பதிவாகும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.