செவிலியர்களின் அலட்சியம்.! இளம்பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி.!
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் பலரும் தடுப்பூசி போடுவதற்கு தயங்கிவந்த நிலையில், தற்போது அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு முன்வந்துள்ளனர். அதற்க்கு காரணம் தற்போது கொரோனாவிலுருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. இந்தநிலையில், திருவனந்தபுரம், மணியரா என்ற இடத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் நேற்று திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணிற்கு 2 செவிலியர்கள் அடுத்தடுத்து 2 கொரோனா தடுப்பூசி போட்டதாக தெரிகிறது. இதனையடுத்து உடனடியாக அந்த பெண்ணுக்கு உடல் சோர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.