படிக்கிறது எம்.எஸ்சி..! ஆனால் பாக்குறது என்ன வேலை தெரியுமா.? மாணவி எடுத்திருக்கும் ஆச்சரிய முடிவு.!
Young girl selected as sanitary worker in Coimbatore corporation
எம்.எஸ். சி படித்துவரும் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் துப்புரவு தொழிலார் வேலைக்கு தேர்வாகியுள்ள சம்பவம் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில், காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து என்ஜினியரிங், பி.எஸ்சி, பி.காம் போன்ற பட்டப்படிப்பு படித்தவர்கள் உட்பட 7,300 இந்த பணிக்கு விண்ணப்பித்தனர். அதில் 5,200 பேர் நேர்காணலுக்கு வந்திருந்தனர். இடஒதிக்கீடு முறைப்படி 321 பேருக்கு துப்புரவு தொழிலாளர் பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த 321 பேரில் கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த மோனிகா என்ற எம்.எஸ்சி. படித்து வரும் மாணவி ஒருவரும் துப்புரவு பணியாளராக தேர்வு செய்யப்பட்டது அனைவரும் ஆச்சரியப்படவைத்தது.
இதுகுறித்து அந்த மாணவி கூறுகையில், படித்திருக்கிறேன் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டேன் என்று இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன். வேலை கிடைத்தது என்ற தகவல் கிடைத்ததும் பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக அந்த மாணவி தெரிய்வத்துள்ளார்.