காதலனின் தவறுகளை ஆதாரத்துடன் விளக்கிய அண்ணன்... கோபத்தில் காதலன் செய்த வெறிச்செயல்... 4 பேர் கைது!.
காதலனின் தவறுகளை ஆதாரத்துடன் விளக்கிய அண்ணன்... கோபத்தில் காதலன் செய்த வெறிச்செயல்... 4 பேர் கைது!.
சென்னையில் காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் அண்ணனை வெட்டிய வழக்கில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் விஜய்(23), இவரது தங்கையை சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ்(26) என்பவர் காதலித்து வந்துள்ளார் . இந்த ராஜேஷின் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன இதனை தனது தங்கு இடம் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார் மைக்கேல் . இதன் காரணமாக மைக்கேல் விஜய்யின் தங்கை ராஜேஷ் உடன் பழகுவதை நிறுத்தி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து மைக்கேல் விஜய்யின் தலையில் வெட்டிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்று இருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மைக்கேல் விஜய்யை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை தலைமறைவாக இருந்த அந்தப் பெண்ணின் காதலன் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆன விக்னேஷ் (21),ஆகாஷ் (23),பாரத் (24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது.