திருமணம் செய்ய வற்புறுத்தியாதால் விபரீதம்... இளம் பெண் தற்கொலை.!! காதலன் கைது.!!
திருமணம் செய்ய வற்புறுத்தியாதால் விபரீதம்... இளம் பெண் தற்கொலை.!! காதலன் கைது.!!
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்று வந்த இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த பெண்ணின் காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சக பயிற்சியாளருடன் காதல்
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் அஞ்சலி. 24 வயதான அஞ்சலி நெய்வேலியின் புதிய அனல் மின் நிலையத்தில் ஐடிஐ அப்ரண்டீஸாக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் அஞ்சலிக்கு தன்னுடன் பயிற்சி பெற்று வந்த காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த சிவானந்தம் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.
தற்கொலை செய்து கொண்ட அஞ்சலி
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சலி, தங்கி இருந்த குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அஞ்சலியின் தாய் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினரிடம் புகாரளித்தார்.
இதையும் படிங்க: "அவ சரி இல்ல சார்: அதான் போட்டுட்டேன்.." ஒரு போன் காலில் பதறிய போலீஸ்.!! கடைசியில் ட்விஸ்ட்.!!
காதலன் கைது
அந்த புகாரில், அஞ்சலியை காதலித்து வந்த சிவானந்தம் அவரை திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரிவித்திருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அஞ்சலி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிவானந்தத்தை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கடலூர் மத்திய சிறையிலடைத்தனர். காதல் விவகாரத்தில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: பவானியின் பவ்விய காதலில் சிக்கி, ஏமாற்றத்தால் இளைஞர் விபரீதம்..! வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து சோகம்.!