×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலனின் நினைவோடு அவரது பெற்றோருக்கு மருமகளாக பணிவிடை செய்யும் இளம்பெண்: தேவதையாக போற்றும் கிராம மக்கள்..!

காதலனின் நினைவோடு அவரது பெற்றோருக்கு மருமகளாக பணிவிடை செய்யும் இளம்பெண்: தேவதையாக போற்றும் கிராம மக்கள்..!

Advertisement

இறந்து போன தன் காதலனின் பெற்றோருடன் மகளை போல் வாழ்ந்து வரும் பெண்ணை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

நாகப்பட்டினம்  மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிராபராமபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பத்மாவதி. இவர்களது  இரண்டாவது மகன் சபரிகிருஷ்ணன்(26) வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார்.

சபரிகிருஷ்ணனும் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரை சேர்ந்தவர் ரேவதி (24). எம்எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்துள்ளார். இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வைத்துள்ளனர். 

இவர்கள் இருவரும் காதலித்து வருவது இரு குடும்பத்தினருக்கும் தெரிந்தவுடன் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்தாண்டு 2021 ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக இரு குடும்பத்தினரும் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், பொதுமக்களுக்கு கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை 7ம் தேதி வேளாங்கண்ணி பகுதியில் மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் சபரிகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சபரிகிருஷ்ணன் உயிரிழந்தார்.

இதனால் இரு குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்தனர். 10 ஆண்டுகளாக காதலித்தவரின் மரணத்தை தாங்க முடியாமல் ரேவதி மனஉளைச்சலில் இருந்து வந்தார். சபரிகிருஷ்ணனை மறக்கமுடியாத ரேவதி, காதலன் வீட்டுக்கே சென்று தங்கி அவரது பெற்றோரை கவனித்து வருகிறார். 

சபரிகிருஷ்ணன் இறந்தாலும் கூட அந்த கவலை எங்களுக்கு தெரியாமல் ரேவதி பார்த்து கொள்கிறார். எனது மகனுக்காக ரேவதி அவளது வாழ்க்கையை இழந்து எங்களுடன வாழ்ந்து வருகிறார் என்று சபரிகிருஷ்ணன் தாய் பத்மாவதி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Young Woman #Nagapattinam #Velankanni #Daughter in law
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story