×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்.! வெறித்தனமாக கையை கடித்துவைத்த இளம்பெண்.! நடந்தது என்ன?? ஷாக் சம்பவம்!!

விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்.! வெறித்தனமாக கையை கடித்த இளம்பெண்.!

Advertisement

சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்த செல்வி என்ற பெண் திருவெற்றியூரைச் சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதனையடுத்து செல்வி ரேவேந்திர குமாரிடம் பணம் நகை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த ரேவேந்திர குமார் குடும்பத்தினர் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி திருவெற்றியூரில் உள்ள காதலன் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று செல்வி வழக்கம்போல் அவரது காதலர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.

தனது காதலி தகராறு செய்தவுடன் உடனடியாக ரேவேந்திர குமார் குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செல்வி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், போலீஸ்காரரின் சட்டையை பிடித்து தாக்கி உள்ளார். அவரின் கையை கடித்து வைத்துள்ளார். ஒருக்கட்டத்தில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Women byte police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story