சொந்த குடும்பத்து பெண்களை ஆபாசமாக படமெடுத்த பட்டதாரி! விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
youngman leak family girl glamour photo
பெண்கள் சிலரை ஆபாசமாக படமெடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் பரப்பப்டுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கயாஸ் முகமது என்பவருக்கு இதில் தொடர்பு உள்ளதாக தெரிய வந்தது. முதுகலைப் பட்டம் படித்த இவர், சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
போலீசார் விசாரணையில், வீதிகளில், பேருந்துகளில், ரயில்களில் பெண்கள் செல்லும்போது ஆபாசமாக படம் எடுத்து, அதனை தவறாக சித்திரித்து தனது அடையாளங்களை காட்டிக்கொள்ளாமல் போலியாக முகநூல் கணக்கு துவங்கி அதில் பதிவேற்றம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரின் தோழி ஒருவர், முகமது ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து முகமது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
விசாரணையில், பெண்களின் மீதான கவர்ச்சி அதிகமாகவே, குடும்பத்திலுள்ள பெண்களையே ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்திருப்பது போலிசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் முகமதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.