வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞர்! நள்ளிரவில் சுடுகாட்டில் பயந்து கதற நேர்ந்த பரிதாபம்! நடுங்க வைக்கும் பின்னணி!
youngman suicide by illegal affairs problem
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள விநாயகம்பாடி என்ற பகுதியை சேர்ந்தவர் பெருமாள். 24 வயது நிறைந்த இவர் வெளிநாட்டில் வேலை செய்து, நாடு திரும்பியுள்ளார் இந்நிலையில் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமலை என்பவரின் மனைவி கன்னியம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை பயன்படுத்திக் கொண்ட கன்னியம்மாள் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி 8.50 லட்சம் பணம் 5 சவரன் நகை ஆகியவற்றை பெருமாளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பெருமாள் மற்றும் கன்னியம்மாள்க்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெருமாள் தனது பணம் மற்றும் நகையை திருப்பி தருமாறு கன்னியம்மாளிடம் கேட்டுள்ளார். இந்த நிலையில் கன்னியம்மாள் பெருமாளிடம் நைசாக பேசி நள்ளிரவில் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அங்கு அவருக்கு மொட்டை அடித்து மாந்திரீகம் செய்துள்ளார்.
இதனால் பயந்து நடுங்கிபோன பெருமாள் வீட்டிற்கு வந்து தனது செல்போனில் அழுதுகொண்டே, கன்னியம்மாள் என்னிடம் பணம், நகைகளை பறித்துக்கொண்டார். மேலும் சுடுகாட்டில் வைத்து எனக்கு பூஜை போட்டார். அதிலிருந்து உடல் முழுவதும் எரிகிறது. தூக்கம் வரவில்லை. உடலில் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது.எனக்கு வாழவே பிடிக்கவில்லை. எனக்கு பில்லி சூனியம் வைத்து கன்னியம்மாள் மாந்திரீகம் செய்துள்ளார். எனது சாவுக்கு காரணம் அவரது மகன் சூர்யாவும்தான் என பேசி வீடியோவை தனது சகோதரி தேவிக்கு அனுப்பி விட்டு பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் பெருமாளின் சகோதரி தேவி காவல் நிலையத்தில் கன்னியம்மாள் மற்றும் அவரது மகன் சூர்யா மீது புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் பெருமாளின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கன்னியம்மாள் மற்றும் அவரது மகன் சூர்யாவை கைது செய்யாததை கண்டித்து உடலை வாங்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.