தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரண்டாவது திருமணம், குடிப்பழக்கம், மாமியாரின் டார்ச்சர் - ராகுல் டிக்கியின் மனைவி அதிர்ச்சி பேட்டி.! வாழ்க்கை தறிகெட்டது எப்படி? 

இரண்டாவது திருமணம், குடிப்பழக்கம், மாமியாரின் டார்ச்சர் - ராகுல் டிக்கியின் மனைவி அதிர்ச்சி பேட்டி.! வாழ்க்கை தறிகெட்டது எப்படி? 

YouTuber Rahul Tiky Dies Wife Speech Latest  Advertisement

 

குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் என எத்தனை மேடைகள் போட்டு பாடம் எடுத்தாலும் உடல் வலி, ஆசையாக இருக்கிறது என குடிப்போரும், அதனை ஆதரிப்போரும் கட்டாயம் அதனால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் எனினும், அவர்களின் விளைவை எதிர்கொள்வதற்குள், அப்பாவிகள் தான் பரிதவிக்கின்றனர். அப்படி ஒரு பரிதவிப்பு மனைவியின் குமுறலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வந்த யூடியூபர் ராகுல் டிக்கி என்பவர், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரின் மறைவு அவரது பின்தொடர்பாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தற்போது பல பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ராகுல் தனது 27 வயதில் உயிரிழந்து இருக்கிறார். சமூக வலைதளத்தில் தன்னை தொண்டுள்ளம் கொண்ட நபராக அடையாளப்படுத்தியவர் குறித்து தற்போது வெளியாகியுள்ள பல பரபரப்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: திருப்பதியில் நிக்கிறான், திருச்செந்தூரில் கத்துறான் - அமைச்சர் சேகர் பாபு பதில்.. அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள்..!

இரண்டாவது திருமணம் - குடி

இந்நிலையில், மறைந்த யூடியூபர் ராகுலின் மனைவி தேவிகா ஸ்ரீ (வயது 21) அளித்துள்ள பேட்டி வெளியாகியுள்ளது. பல பரபரப்பு தகவல் அந்த பேட்டியில் வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில், "ராகுலுக்கு தேவிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்து விவாகரத்து ஆகியுள்ளது. ராகுலின் தாய் இஸ்லாமிய மதத்தையும், தந்தை இந்து மதத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் ராகுல் - தேவிகா ஸ்ரீ திருமணம் கோவிலில் வைத்து நடைபெற்றுள்ளது. ராகுலின் முதல் திருமணமும் இதே முறையில் நடைபெற்ற நிலையில், அந்த பெண் ராகுலுடன் 6 மாதம் குடித்தனம் நடத்தி, பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். 

ராகுல் முதலில் போட்டோ எடிட் செய்து கொடுக்கும் பணியில் இருந்து வந்த நிலையில், அவ்வப்போது தாயின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்ததால், வீட்டிற்கே மதுபானம் வாங்கி வந்து அருந்தும் பழத்தை கொண்டுள்ளார். இதற்கு தாயும் உறுதுணையாக இருந்துள்ளார். சில நேரம் போதையில் வீட்டில் அடாவடி செய்வதையும் ராகுல் பழக்கமாக கொண்டுள்ளார். தேவிகா ஸ்ரீயுடன் ராகுல் திருமணம் செய்யும்போது, தனக்கு காதல் தோல்வி என்று மட்டுமே கூறி இருக்கிறார். திருமணத்திற்கு பின் ஒருகட்டத்தில் உண்மை தெரிந்தாலும், முறையாக விவாகரத்து பெற்றுள்ள காரணத்தால், தேவிகா சமாதானம் அடைந்து, கணவரான ராகுல் மீது கொண்ட காதலால் தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

மனமுடைந்த குடி குடிகெடுத்து

இதனிடையே, கணவரின் குடிப்பழக்கத்தை கண்டிக்க தொடங்கிய நிலையில், அதற்கு உறுதுணையாக இருந்த மாமியாரையும் சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஒருசில நேரம் ராகுல் போதையில் மாமியார், மனைவியை தாக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் கூட சண்டை காரணமாக தாய் வீட்டிற்கு வந்தவரை, மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தபோதுதான் விபத்து நடந்துள்ளது. விபத்திற்கு பின்னர் ராகுலின் தாய், தனது மகனை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்துள்ளார். மேலும், தேவிகாவை எந்த இடத்திலும் அவரின் மனைவியாக அடையாளப்படுத்தாமல், மகனின் ஆவணங்களை கேட்டும் அவதூறு செய்துள்ளார். என் கணவருடன் அன்பாக வாழ்ந்த எனக்கு என்ன பதில் இருக்கிறது?. எனது மாமியார் தனியாக சென்றால் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என பேசினார். அதனால்தான் நான் வந்தேன். நான் அவர்களின் பிள்ளைபோல இருக்கிறேன் என கேட்டேன். ஆனால், மாமியார் இப்படி நடப்பார் என எதிர்பார்க்கவில்லை. எனது கணவருக்கு பக்தி அதிகம். அவருக்கு கருப்பு என்றால் அதிகம் பிடிக்கும். குடிக்கும்போதெல்லாம் எனக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்கவில்லை என புலம்புவார். ஆதங்கத்தில் என்னை எல்லாத்துக்கும் காரணம் நான்தான் என அவதூறாக பேசியபோதுகூட நான் வருத்தத்தில் பேசுகிறார்கள் என விட்டுவிட்டேன். இன்று என்னை தொடர்புகொண்டு ராகுலின் ஆவணங்கள், சான்றிதழ், இருசக்கர வாகனம் என அனைத்தையும் கேட்டு அனாதை ஆகிவிட்டனர். என்னுடன் வந்து இரு என கேட்டால் கூட பரவாயில்லை" என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் ஆவேசம்.. பலமணிநேரம் அடைத்து வைக்கப்பட்டதால் கொந்தளிப்பு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#YouTuber #Rahul Tiky #tamilnadu #erode #Rahul Tiky Wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story