டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை! மத்திய அரசு அதிரடி!
59 china apps banned include Tiktok
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் டிக்டாக் போன்ற செயலிகளின் பயன்பாடு மிக அதிகளவில் உள்ளது. இந்தியாவில் 100 மில்லியனுக்கு அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டதில் அடங்கும்.
சீன ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில ஆப்கள் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன.
இந்தநிலையில், இது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.