#JustIN: சூரியனின் முழு புகைப்படத்தை பகிர்ந்த ஆதித்யா எல்1: அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
#JustIN: சூரியனின் முழு புகைப்படத்தை பகிர்ந்த ஆதித்யா எல்1: அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
கடந்த செப்டம்பர் 2ம் தேதி பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் உதவியுடன், சூரியன் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ள இஸ்ரோ ஆதித்யா எல்1 விண்கலத்தை செலுத்தியது.
ஆதித்யா எல்1 விண்கலம் தொடர்ந்து சூரியனை நோக்கி பயணித்து வந்தது. இந்நிலையில், ஆதித்யா எல்1 சூரியனின் முழு புகைப்படத்தையும் பதிவு செய்து அனுப்பி இருக்கிறது. போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஷபியார் தொடர்பான தகவல்களை நுட்பமாக பதிவு செய்து அனுப்பியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதித்யாவில் இருக்கும் சூரிய புறவூதா படம்பிடிக்கும் கருவிகள் உதவியுடன் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு இருக்கின்றன. இஸ்ரோவின் ஆராய்ச்சியில் மேற்கூறிய விஷயம் ஒரு மைல்கல் ஆகும்.