இனி பேஸ்புக், இன்ஸ்டாவில் இதை செய்ய முடியாது.. 2k கிட்ஸ் அதிர்ச்சி.! மத்திய அரசு செக்.!
இனி பேஸ்புக், இன்ஸ்டாவில் இதை செய்ய முடியாது.. 2k கிட்ஸ் அதிர்ச்சி.! மத்திய அரசு செக்.!
சமூக சீர்கேடு
சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் மிக அதிகரித்து வருகின்றது. இது பல வகையில் கற்றுக் கொள்வதற்கு பயன்படுகிறது என்றாலும் கூட, இதன் மூலம் நடக்கும் தீமைகளும் மிக அதிகமாக இருக்கின்றன. அதுவும் சிறுவர், சிறுமியர்கள் இதுபோன்ற செல்போன் மோகத்தால் வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மத்திய அரசு புதிய விதி :
இதனால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் மற்றவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவர்கள் பெரிது படுத்துவதல்ல. இது போன்ற பிரச்சனைகளை குறைக்கும் விதமாக மத்திய அரசு ஒரு புதிய விதியை உருவாக்கி இருக்கிறது. அது என்னவென்றால் வயது கட்டுப்பாடு தான்.
பெற்றோர் சம்மதம்
நம் நாட்டில் எந்த வயதினர் வேண்டுமென்றாலும், சமூக வலைதளங்களில் கணக்கு துவங்கலாம் என்ற நிலைதான் இருக்கிறது. இது பல்வேறு சமூக சீர்கேடுக்கு வழிவகை செய்வதாக காலம் காலமாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை தடுத்து, நிறுத்தும் எண்ணத்தில் மத்திய அரசு 18 வயதிற்கு குறைவாக இருப்பவர்கள் கணக்கு துவங்க பெற்றோர்களின் சம்மதம் பெற வேண்டும் என்ற ஒரு புதிய விதியை உருவாக்கி இருக்கின்றனர்.
கருத்து கேட்பு
தற்போது இந்த விதியை அமல்படுத்துவது பற்றி அரசு கருத்து கேட்டு வருகிறது. விரைவில் இந்த விதி அமலுக்கு வரும் என்றால், வளரும் தலைமுறையினர் தங்கள் விருப்பத்திற்கு போலி கணக்குகளை உருவாக்கி குற்ற செயல்களில் மற்றும் வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்படும்.