வருகிறது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி; தெளிவான இரவு வானத்தை இனி எப்போதும் பார்க்க முடியும்
வருகிறது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி; தெளிவான இரவு வானத்தை இனி எப்போதும் பார்க்க முடியும்
தொலைநோக்கி: நாம் அனைவரும் எங்கேயோ கேள்விப்பட்டது போல் தோன்றும். ஆம், பள்ளியில் படிக்கும் போது கண்டிப்பாக இதை பற்றி படித்து இருப்போம். அதை பற்றிய ஒரு பதிவு தான் இது.
தொலைநோக்கி தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் நோக்க இது உதவுகிறது.
தொடக்ககாலத் தொலைநோக்கிகள் லியோர்னாட் டிக்கெஸ், தாகி அல்-டின் போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவராவார்.
அப்படி வரலாற்றை தொடங்கிய தொலைநோக்கி, இப்போது பல பரிமாணங்களை கடந்து வானில் உள்ள அனைத்தையும் மிகவும் துல்லியமாக பார்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.
"The Giant Magellan Telescope " என்ற மிகப்பெரிய தொலைநோக்கி சிலியில் உருவாகி வருகிறது. இதன் பயன்பாடு 2024 ல் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Giant Magellan Telescope (GMT) ஆனது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். இதைப் பயன்படுத்தி வானியலாளர்கள் பண்டைய பிரபஞ்சம் மற்றும் அந்நிய உயிர்கள் பற்றி ஆராய முடியும் என நம்பப்படுகிறது.
சிலியின் மலைத்தொடரில் கட்டுமானப் பணியாளர்கள் இதன் செயற் திட்டத்திற்காக கடந்த செவ்வாயன்று தரையை தயார்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
இந்த கருவி 2 மில்லியன் பவுண்டு எடையுள்ளது. ஆகையால் தொழிலாளிகள் 23 அடி ஆழ துளைகளை பாறைப் படுக்கையில் துளைத்தவண்ணமுள்ளனர்.
இது கான்க்ரீட்டால் நிரப்பப்பட்டு இந்த கருவிக்கு தேவையான ஆதாரத்தை வழங்க முடியும் என சொல்லப்படுகிறது.
GMT ஆனது Atacama பாலைவனத்திலுள்ள Las Campanas ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி புவியின் உலர்வான, உயர்வான பகுதிகளில் ஒன்று.
எனவே வருடம் முழுவதும் ஆய்வாளர்களால் தெளிவான இரவு வானத்தை பார்க்க முடியும் என நம்பப்படுகிறது.