கொரோனா பாதிப்பு பகுதிகளை இனி கூகுள் மேப்பில் பார்க்கலாம்! புதிய வசதி!
Google Maps Update for corona
சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இந்தநிலையில், உலகின் பல நாடுகளில் மக்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் முயற்சியாக கூகுள் நிறுவனம் தங்கள் தரப்பிலிருந்து புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதி, கொரோனா பாதிப்பு இருக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும். இந்த அப்டேட் தற்போது இந்தியா, அர்ஜெண்டினா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர நாடுகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம் மாநில மற்றும் தேசிய எல்லைகளில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் குறித்தும் அறிந்துகொள்ளமுடியும் . ஆனால் இந்த அப்டேட் தற்போது கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.