தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்களுக்கு தெரியுமால் உங்கள் வங்கியில் இருந்து எப்படி பணம் திருடப்படுகிறது? இத படிங்க புரியும்!

How hackers are taking your money from your ATM card

How hackers are taking your money from your ATM card Advertisement

வளர்ந்து வரும் இந்த டெக்னாலஜி உலகில் வங்கி கணக்கு இல்லாமல் யாரும் இல்லை. நகரங்கள் தொடங்கி கிராமங்கள், பட்டி தொட்டி வரை உள்ள அனைவரிடமும் வங்கி கணக்கு உள்ளது. அதேபோல் வங்கி கணக்கு உள்ள அனைவரிடமும் நிச்சயம் ATM கார்ட் இருக்கும். முன்பெல்லாம் பணம் போடவோ அல்லது பணம் எடுக்கவோ வேண்டுமென்றால் வரிசையில் நிற்கவேண்டும். ஆனால் இந்த ATM கார்ட் மூலம் அணைத்து வேலைகளும் எளிதில் முடிகிறது.

பொதுவாகா இரண்டு வகையான கார்டுகள் உள்ளன. ஓன்று  டெபிட் கார்ட் மற்றொன்று கிரெடிட் கார்ட். டெபிட் கார்டை பொறுத்தவரை உங்கள் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும். கிரெடிட் கார்டை பொறுத்தவரை நீங்கள் செலவு செய்த பின்னர் அந்த தொகையை செலுத்தினால் போதும்.

Online fraud

இதுபோன்ற வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க அது சம்மந்தமான திருட்டுகளும், ஏமாற்று வேலைகளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. நம்மளுடை கார்ட் நம்மகிட்ட இருக்கைல எப்படி திருட்டு நடக்கும்னு யோசிக்கிறீங்களா? அதாவது ஒவொரு கார்டிலும் பதினாறு இலக்கங்கள் கொண்ட நம்பர் பதிய பட்டிருக்கும். மேலும் அந்த கார்ட் எப்பொழுது காலாவதியாகி போகிறது, கார்ட் வைத்திருப்பவரின் பெயர் என்ன மற்றும் CVV என்று சொல்லப்படும் மூன்று இழக்க எண்கள் இருக்கும்.

இந்தியாவை பொறுத்தவரை நீங்கள் கார்டை தேய்த்தாலோ, அல்லது ஆன்லைனில் பயன்படுத்தினாலோ ஒரு ரகசிய எண்ணினை நாம் பதிவிட வேண்டும் அல்லது ஒன் டைம் பாஸ்வர்ட் என சொல்லப்படும் எண்ணினை பதிவிட வேண்டும். ஆனால் இவை அனைத்தும் நீங்கள் உங்கள் கார்டை இந்திய அளவில் பயன்படுத்தும்போது மட்டும்தான். ஒருவேளை இந்தியாவில் இருந்துகொண்டு வெளிநாடுகளில் உங்கள் கார்டை பயன்படுத்தும்போது இந்த ரகசிய குறியீடு அல்லது ஒன் டைம் பாஸ்வர்ட் கொடுக்க தேவை இல்லை.

இதனால் உங்கள் கார்டில் உள்ள பதினாறு இழக்க எண், பெயர், காலாவதி தேதி, மற்றும் CVV எண் மட்டும் தெரிந்தால் போதும். உங்கள் ATM கார்ட் கூட தேவை இல்லை. எளிதாக உங்கள் கணக்கில் உள்ள தொகையை எளிதாக எடுத்துவிட முடியும்.

உங்க அட்டையில்  உள்ள இந்த விஷயம் மற்றவர்களுக்கு எப்படி தெரிய போகிறது என்று நினைக்கிறீர்களா? இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதற்காகவே அதிகப்படியான நபர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் முறைகளில் ஓன்று தொலைபேசி அழைப்பிதழ். உங்களுக்கு கால் செய்து நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம், உங்கள் அட்டை காலாவதியாகி போகிறது அதை புதுப்பிக்க உங்கள் அட்டையில் உள்ள விவரங்களை தரும்படி கேட்பார்கள். அவர்கள் கேட்கும் விவரங்களை நீங்கள் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். உங்கள் கணக்கில் உள்ள மொத்தமும் சுருட்டப்படும்.

இதேபோன்று வங்கியில் இருந்து SMS அனுப்புவதுபோல் உங்கள் தொலைபேசி எங்களுக்கு SMS வரலாம். அதில் உங்கள் கணக்கு, அல்லது அட்டை காலாவதியாகி போகிறது, உடனே புதுப்பிக்க கீழ உள்ள லிங்கை க்ளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை அளிப்பதன் மூலம் உங்கள் கணக்கு புதுப்பிக்கப்டும் என அந்த செய்தியில்  கூறப்பட்டிருக்கும். அவர்கள் சொன்னபடி நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை கொடுத்துவிட்டால் உங்கள் கணக்கில் உள்ள அனைத்தும் காலியாகிவிடும்.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் உங்களுக்கு வரும் லிங்க் அல்லது இணையதள முகவரி உண்மையான வங்கி இணையதள முகவரி போன்றே இருக்கும். எந்த ஒரு வங்கியும் உங்கள் அட்டையில் உள்ள முழு விவரங்களையும் தொலைபேசி அழைப்பிலோ அல்லது இணையதளம் வாயிலாகவோ கேட்க மாட்டார்கள். எனவே விழிப்புடன் செய்லபடுங்கள். மற்றவர்களும் இதனை பகிர்ந்து உதவுங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Online fraud #ATM Fraud #ATM safty tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story