வாரத்திற்கு 90 மணிநேர வேலை; எல்&டி நிறுவனர் பேச்சு.. குவியும் கண்டனங்கள்.!
வாரத்திற்கு 90 மணிநேர வேலை; எல்&டி நிறுவனர் பேச்சு.. குவியும் கண்டனங்கள்.!
எல் & டி குழுமத்தின் நிறுவன தலைவர் எஸ்.என் சுப்பிரமணியம், பணியாளர்கள் 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இந்த கருத்து மிகப்பெரிய அளவில் விவாதத்தை உண்டாக்கிய நிலையில், முன்னதாக இன்போசிஸ் தலைவரும் இதே போன்ற கருத்து ஒன்றை பதிவு செய்து சர்ச்சைக்குள் சிக்கினார்.
சு.வெங்கடேசன் கண்டிப்பு
இந்த விசயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார். தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு. தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார்.
இதையும் படிங்க: லாட்டரியில் பணம் வென்றதாக வலை.. நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் பணத்தை இழந்து தற்கொலை.!
இலாபவெறி?
அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா? சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான். தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா? இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான். நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது" என தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், சுப்பிரமணியனின் கருத்து சர்ச்சையான காரணத்தால், எல்&டி தரப்பு புதிய விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதாவது, "எல்&டி நிறுவனரின் கருத்து பெரிய இலட்சியத்தினை காண்பிக்கிறது. பெரிய உழைப்பை போட்டால்தான், அசாத்திய விளைவுகள் கிடைக்கும்" என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக மக்களே உஷார்.. வாட்ஸப்பில் இந்த மாதிரி மெசேஜ் வருதா? மோசடி எச்சரிக்கை..! நம்பிடாதீங்க.!