சோதனைகளை கடந்து சாதித்துக்காட்டிய எலான் மஸ்க்.. சிந்தனையை வைத்து செஸ் கேம் விளையாடிய உடல்-உறுப்பு செயலிழந்த நபர்.!
சோதனைகளை கடந்து சாதித்துக்காட்டிய எலான் மஸ்க்.. சிந்தனையை வைத்து செஸ் கேம் விளையாடிய உடல்-உறுப்பு செயலிழந்த நபர்.!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் நியூராலின்க் (Neuralink) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை உலக செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் நடத்தி வருகிறார். நியுராலின்க் நிறுவனம் சார்பில் மனித நினைவுகளை பயன்படுத்தி ஸ்மார்ட் பொருட்களை கையாளும் திறன் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதற்காக முதலில் குரங்குகளின் மூளையில் நியுராலின்க் சிப்கள் பொருத்தப்பட்டு, அவை படிப்படிப்பாக சோதிக்கப்பட்டு வந்தன. இந்த சோதனை வெற்றியடைந்த நிலையில், உடல்-உறுப்பு செயலிழந்த நபரை வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முதல் முயற்சி வெற்றியை அடைந்ததாகவும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சிப் வெற்றிகரமாக பொறுத்தப்பட்டதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நியுராலின்க் பொருத்தப்பட்ட நபர், தனது நினைவாற்றல் திறனை பயன்படுத்தி ஸ்மார்ட் திரையுடன் இணைக்கப்பட்ட லேப்டாப்பில், செஸ் கேம் விளையாடினார். இதுகுறித்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக எலான் மஸ்கின் நியுராலின்க் சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட குரங்குகள் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.