2019ஆம் ஆண்டு வாட்ஸப்பில் அறிமுகமாகவுள்ள புதிய வசதிகள்!
New features to be released in whatsapp at jan 2019
வாட்ஸாப் நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்ய உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் மிகவும் முக்கியமானவை வாட்சப் டார்க் மோட், மீடியா பிரிவியூ மற்றும் தொடர் வாய்ஸ் மெசேஜ்.
வாட்சப் நிறுவனமானது ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதை அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயன்படும் விதமாக அமைந்துள்ளது. உலகிலேயே மிகவும் பிரபலமான வாட்ஸ் ஆப்பில் 2018 ஆம் ஆண்டு பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் மிகவும் பிரபலமானவை வாட்சப் ஸ்டிக்கர்ஸ், PiP மற்றும் குரூப் வீடியோ காலிங் போன்றவை.
2019-ம் ஆண்டு துவங்கியதையடுத்து வாட்சப் நிறுவனம் மேலும் பல்வேறு புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் இந்த ஜனவரி மாதத்தில் சில வசதிகள் அறிமுகம் ஆகியுள்ளன. அவைகள்: டார்க் மோட், மீடியா பிரிவியூ மற்றும் தொடர் வாய்ஸ் மெசேஜ்.
டார்க் மோட்:
டார்க் மோட் பல்வேறு சமூக வலைதள ஆப்புகளில் பெரும்பாலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 2018ஆம் ஆண்டு பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆப்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இரவு நேரங்களில் கண் பார்வைக்கு ஏற்றவாறு குறைவான வெளிச்சத்தை வெளிப்படுத்தும் விதமாக இது வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இந்த பயன்பாட்டினை ஜனவரி மாதம் வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்ய வாட்சப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொடர் வாய்ஸ் மெசேஜ்:
தகவல்களை வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸப் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பாகவே அறிமுகம் செய்து விட்டது. வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு வாய்ஸ் மெசேஜையும் படிப்பதற்கு வாடிக்கையாளர் ஒவ்வொரு மெசேஜாக கிளிக் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்கு மாற்று வழியாக ஒரு உரையாடலில் துவக்கத்தில் இருக்கும் மெசேஜை ஒரு நபர் கிளிக் செய்யும் நிலையில் அதனை தொடர்ந்து உள்ள அனைத்து வாய்ஸ் மெசேஜ்களையும் தானாகவே கேட்கும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மீடியா பிரிவியூ:
இப்பொழுது வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களை வாட்சப்பை திறக்காமலேயே நோட்டிபிகேஷன் வாயிலாக தகவல்களை படிக்கும் வசதி இருந்துவருகிறது. இதேபோல் வாட்ஸ் அப்பில் வரும் வீடியோக்களையும் வாட்சப்பை திறக்காமல் நோட்டிபிகேஷன் வாயிலாகவே பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.