ஜி-பேயில் ஹேக்கிங்? யுபிஐ பயனர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.!
ஜி-பேயில் ஹேக்கிங்? யுபிஐ பயனர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.!
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை தொடர்ந்து, நாம் பணத்தை இன்றளவில் பெரும்பாலும் நெட்பேங்கிங், யுபிஐ போன்ற முறைகளில் பரிவர்த்தனை செய்ய தொடங்கிவிட்டோம். கிராமத்தில் இருக்கும் பெட்டிக்கடை முதல், பெரிய அளவிலான பணபரிமாற்றத்திற்கும் யுபிஐ பயன்படுகிறது. இதனால் யுபிஐ பயன்பாடு என்பது அதிகளவு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதனை பயன்படுத்தி பல்வேறு நூதன மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. மக்களின் அறியாமை மற்றும் அலட்சியம், அதீத நம்பிக்கை போன்றவற்றை தங்களுக்கு சாதகமாக்கி இணையவழி குற்றங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இதையும் படிங்க: முகநூலில் வரும் மோசடி லிங்குகள்; ஏமாந்துவிடாதீங்க மக்கா.! விபரம் உள்ளே.!
உஷாராக இருங்கள்
இதனிடையே, ஜி-பெ வழியாக மோசடி ஒன்று நடைபெறுவதாக சைபர் கிரைம் காவல் துறையினர் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த காவலர்கள் எச்சரிக்கையை, ஜிபெ கணக்குக்கு தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக நபர் ஒருவர் கூறுவார். அந்த பணத்தை திரும்ப அனுப்புமாறும் உங்களுக்கு கோரிக்கை வைப்பார்.
அவர் பணம் அனுப்பியதுபோல உங்களுக்கு வாட்ஸப்பில் போட்டோ வரலாம். இதனை நம்பி அவர்கள் அனுப்பும் லிங்கை தொட்டாலோ அல்லது நீங்கள் ஜிபேயில் திரும்ப பணம் அனுப்பினாலோ, சில நொடிகளில் உங்களின் யுபிஐ கணக்கை ஹேக்கிங் செய்து, அவர்கள் பணம் திருடிவிடுவார்கள். ஆகையால், உங்களுக்கு அவ்வாறான அழைப்பு பெறப்பட்டால், காவல் நிலையம் வந்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.