வாட்ஸ் அப்பில் புதிய வசதி! மகிழ்ச்சியில் வாட்ஸ்அப் பயனாளர்கள்!
new update in whats app
உலகம் முழுவதும் செல்போன்களின் மூலம் தகவல்களை அனுப்புவதில் முன்னணி செயலியாக இருந்து வருகிறது வாட்சப். பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான வாட்ஸப்பினை உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப வாட்சப் நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய வசதிகளை உருவாக்கி கொடுத்து வருவது தான்.
இந்தநிலையில், வாட்ஸ்அப் செயலியில் உள்ள வாய்ஸ் கால் ஆப்ஷன் மூலம் நீங்கள் ஒரு அழைப்பில் இருந்தால் மற்றொரு அழைப்பு வரும் போது புதிதாக இனி ‘கால் வெயிட்டிங்’ ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பேசிக்கொண்டிருக்கும் அழைப்பு அல்லது வரும் புதிய அழைப்பு எதைத் தொடர வேண்டும் என்பதை பயனாளரே முடிவு செய்துகொள்ளலாம்.
இதற்க்கு முன்னர், ஒருவருடன் சாதாரண அழைப்பிலோ அல்லது வாட்ஸ் அப் அழைப்பிலோ பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மற்றொரு வாட்ஸ் அப் அழைப்பு கொடுக்க முடியாது. அந்த அழைப்பு தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும். ஆனால் தற்போது வேறு அழைப்பில் இருக்கும் போது வாட்ஸ் அப் அழைப்பு வெயிட்டிங் காலாக இருக்கும். இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அப்டேட் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.