போலியான பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனம் சிக்கியுள்ளதா? வெளியான அதிர்ச்சித் தகவல்.!
oneline shopping in india - fake companys
சர்க்கில் என்ற இணையதளம் ஆன்லைனில் போலியாக விற்கப்படும் பொருட்களை கண்டறிய சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் 5ல் ஒரு பங்கு அளவுக்கு போலியாக பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருநகரங்களில் பணிநிமித்தம், நேரமின்மை போன்ற அவசர காலங்களினால் நடுத்தரவர்க்கம் முதல் வசதியானவர்கள் வரை ஷாப்பிங் செல்ல போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால் தாங்கள் இருக்கும் இல்லங்களுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தற்சமயம் சிறு நகரங்களிலும் தொடங்கியுள்ளது.
பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படுவதில்லை. மேலும் ஆர்டர் செய்த பொருள் ஒன்றாகவும் டெலிவரி ஆகும் பொருள் வேறு ஒன்றாகவும் இருக்கிறது. சில சமயங்களில் ஒன்றுமே இல்லாமல் செங்கல், மணல், செருப்பு போன்ற பொருட்களும் வாடிக்கையாளர்களிடம் சேர்ந்த நிகழ்வும் நடந்து உள்ளது.
இந்தநிலையில் இந்த போலியான நிறுவனங்களை கண்டறிய சர்க்கில் என்ற இணையதளம் 30,000 வாடிக்கையாளரிடம் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், கடந்த 6 மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருட்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவிகித வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு, ஸ்னாப்டீஸ் என்று 37 சதவிகிதம் பேரும், 22 சதவிகிதம் பேர் பிளிப்கார்ட் என்றும், பேடிஎம் மால் என 21 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.
மேலும் 20 சதவிகிதம் பேர் அமோசான் நிறுனம் போலியான போருட்களை விற்பதாக தெரிவித்துள்ளனர். நறுமண மற்றும் ஒப்பனை பொருட்கள், விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பைகள் ஆகியவை தான் போலியானவையாக இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.