மிகப்பெரிய தொழிநுட்பத்துடன் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங் 8K தொலைக்காட்சி!
Samsung launching new 8K television
தொலைபேசி, தொலைக்காட்சி என அணைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவரும் சாம்சங் நிறுவனம் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறைகயாக 8k தொழில்நுட்பத்தில் புதிய தொலைக்காட்சியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
சாம்சங் Q900R 8K என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சியானது 8K தொழிநுட்பத்தில் வருவதால் இந்த தொலைக்காட்சியில் பார்க்கும் படங்கள் அனைத்தும் மிக கூர்மையாமாவும் தெளிவாகவும் தெரியும் அம்சம் கொண்டது.
சாதாரணமாக முழு HD தொலைக்காட்சிகள் கிட்டத்தட்ட 2 மில்லியன் பிக்சல்களைக் கொண்டிருக்கும். 4K தொலைக்காட்சிகள் HD இலும் நான்கு மடங்கான பிக்சல்களைக் கொண்டிருக்கும். தற்போது சாம்சங் வெளியிடும் இவ் 8K தொலைக்காட்சியானது கிட்டத்தட்ட 33 மில்லியன் பிக்சல்களைக் கொண்டிருக்கும்.
விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.