×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10-இல் 6 பேரால் இது இல்லாமல் வாழ்க்கையையே நடத்த முடியாது - ஆய்வில் பகீர் தகவல்.!

10-இல் 6 பேரால் இது இல்லாமல் வாழ்க்கையையே நடத்த முடியாது - ஆய்வில் பகீர் தகவல்.!

Advertisement

10 பருவ வயதுள்ள சிறார்களில் 6 பேர் செல்போன் இல்லாமல் தங்களின் வாழ்நாட்களில் ஒரு நாள் கூட கடக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

நோக்கியா நிறுவன ஃபோன்களின் தாயகமான எச்.எம்.டி குளோபல் நிறுவனம் 2000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பேட்டரி காலியாவதால் தங்களால் தொடர்ந்து அலைபேசியை உபயோகம் செய்ய இயல்வது இல்லை என்று 10 இல் ஒருவர் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார். 

இதுகுறித்த ஆய்வில், "10 பேரில் 3 பேர்கள் வீட்டில் இருந்து புறப்படும் போது, தங்களது செல்போன்களையும் உடன் எடுத்து செல்கின்றனர். 10 பேரில் ஒருவர் தங்களின் பணியிடத்திற்கு செல்லும் பாதையை தேட செல்போனை உபயோகம் செய்கின்றனர். 16 % நபர்கள் செல்போன் கேமிராவை கண்ணாடி போல உபயோகம் செய்து வருகின்றனர். 

68 % நபர்கள் தங்களின் அலைபேசியை புகைப்படம் எடுக்கவும், 64 % பேர் நேரத்தை பார்க்கும், 62 % பேர் வானிலை அறிக்கை தொடர்பான தகவலையும் பார்க்கின்றனர். 4 இல் 1 நபர் தங்களின் இலக்கை சென்றடைய அலைபேசியை பயன்படுத்துகிறார்கள். இவர்களில் 35 % பேர் அச்சிடப்பட்ட வரைபடத்தை உபயோகம் செய்ததே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இளம் பருவத்தில் உள்ளவர்கள் தங்களின் செல்போன் ஆர்வத்தால், நாளொன்றுக்கு 2 முறைகள் செல்போனை சார்ஜிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 48 % நபர்கள் தங்களின் செல்போன் எதிர்பாராத விதமாக தொலைந்துவிட்டால், அதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளவராகவும் தெரிவிக்கின்றனர். 

இந்த மனஉளைச்சல் பேங்க் கார்டு தொலைத்துப்போனால் ஏற்படும் மன அழுத்தத்தை விட 46 % அதிகம் என்றும், கார் சாவி தொலைந்தால் ஏற்படும் மன அழுத்தத்தை விட 40 % அதிகம் என்றும், திருமண மோதிரம் தொலைந்துவிட்டால் ஏற்படும் மன அழுத்தத்தை விட 25 % அதிகம் என்றும் கூறுகிறார்கள்" என தகவல் தெரியவந்துள்ளது. 

இவ்விஷயம் தொடர்பாக எச்.எம்.டி நிறுவன அதிகாரி பெட்ரி ஹ்யரினேன் தெரிவிக்கையில், "நாம் தெரிந்தோ, தெரியாமலோ ஸ்மார்போன்களை சார்ந்து வாழ தொடங்கிவிட்டோம். எங்களது நிறுவனத்தை பொறுத்தவரையில், பொதுவான புகாராக பேட்டரி காலம் குறித்தவை சொல்லப்படுகிறது. நாங்கள் 3 நாட்கள் வரை தாங்கும் அளவுள்ள பேட்டரி உள்ள செல்போன்களையும் விற்பனை செய்கிறோம். 

எங்களின் ஆய்வுப்படி நபரொருவர் செல்போனை ஒரு நாளில் 20 முறை உபயோகம் செய்யலாம். 2 மணிநேரம் 24 மணிநேரத்தில் உபயோகம் செய்யலாம். ஏனெனில் அவர்களுக்கும் பல்வேறு பணிகள் இருக்கும். ஆனால், இன்றளவில் ஸ்மார்ட்போனை எந்த சமயத்திலும் கையில் வைத்துள்ளவர்கள், அதனை பல்வேறு விஷயங்களுக்கு உபயோகம் செய்கிறார்கள். 

4 இல் ஒருவர் தனது பயணங்கள் குறித்த தேடல், மேப் உபயோகம் செய்தல் போன்றவற்றில் செலவிடுகிறார். பலரும் மணிக்கணக்கில் வீடியோ பேசுவது, எதோ ஒரு வீடியோ பார்ப்பது என இருக்கிறார்கள். இதனால் போனின் பேட்டரி திறன் குறைகிறது. செல்போனை பொறுத்தவரையில் ஒவ்வொரு விஷயத்திற்கும் பேட்டரி துணை தேவை. அதனை நாம் எப்படி உபயோகம் செய்கிறோம் என்பதை பொறுத்தே பேட்டரியின் ஒருமுறை சார்ஜிங் பயனும் கிடைக்கும்" என்று தெரிவித்தார். 

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதற்கான முதல் 20 விஷயங்கள்:

1) புகைப்படம் எடுக்க, 2) நேரம் பார்க்க, 3) வானிலை தகவலை பார்க்க, 4) E Mail அனுப்ப, 5) செய்திகளை வாசிக்க, 6) அலாரம் அல்லது மணிநேர சேவைகள், 7) வங்கி பரிவர்த்தனை, 8) ஷாப்பிங், 9) சந்திப்புகளுக்கான திட்டமிடல், 10) உணவுகளை பார்க்க, 11) கண்காணிப்பு பயிற்சி, 12) பயணத்திற்கான போக்குவரத்து முன்பதிவு, 13) விடுமுறை நாட்களுக்கான பயணங்கள், 14) கேம் விளையாட, 15) Credit அல்லது Debit Card உபயோகித்தல், 16) வேலை, 17) பேருந்தில் பயணிக்கும் போது பொழுதை கழிக்க, 18) கண்ணாடியாக பயன்படுத்துவது, 19) உறக்கத்தை கண்காணிக்க, 20) வேலைகளுக்கு அல்லது வேலையிடங்களுக்கு செல்ல.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Adult #mobile #world #research #Nokia
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story