×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஆர்வம் உடையவர்களா! நீங்கள்- அதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

space-tourist place

Advertisement

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சுற்றுலா செல்வதை அதிகம் விரும்புகின்றனர். எனவே பெரும்பாலான மக்கள் சுற்றுலா செல்ல அருவிகள், மலைப்பிரதேசங்கள் என பல இடங்களை தேர்வு செய்து குடும்பத்துடனும், ஜோடியாகவும் சென்று வருகின்றனர்.

ஆனால் இன்னும் புதுயுக வளர்ச்சியாக தற்போது விண்வெளியையே சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கு உலகில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில், விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொதுமக்களை சுற்றுலாவிற்காக கூட்டிச்செல்ல Bigelow Space Operations என்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக, பொதுமக்களில் 16 பேரை தேர்ந்தெடுத்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பலாம் எனவும் திட்டமிட்டு உள்ளது. ஆனால் அதற்கான ஆகும்  செலவு எவ்வளவு என்பதனையும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, ஒன்றில் இருந்து இரண்டு மாதம் வரை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருப்பதற்கு 52 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், 360 கோடி) செலவாகும் என Bigelow நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் Space X ராக்கெட்டில் மனிதர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு செல்ல பல மனிதர்கள் ஆர்வம் காட்டினாலும், அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஏற்றவாறு மட்டுமே அமைந்திருப்பது சாதாரண மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#space #tourist #360 cr
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story