விண்ணில் பாய்ந்தது பால்கான் 9 டிராகன்; பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.!
விண்ணில் பாய்ந்தது பால்கான் 9 டிராகன்; பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.!

கடந்த 2024 ஜூன் மாதம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, ஆய்வுப்பணிக்கு இந்திய வம்சாவளி அமெரிக்கர் சுனிதா வில்லியம்ஸ், பச் வில்மோர் சென்றிருந்தனர்.
இவர்கள் ஒரு வார காலம் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு, பின் நாடு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அவர்கள் பூமிக்கு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது.
இதனால் அவர்கள் விண்வெளி நிலையத்துக்குள் சிக்கித்தவிக்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களை மீட்கும் பணியில் கடந்த 9 மாதமாக நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து ராக்கெட் தயாரித்து அனுப்பி வருகிறது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்குறீங்களா? 21 நாட்களில் ரூ.24 இலட்சம் காலி.. வடமாநில இளைஞர் கைது.!
சமீபத்தில் இருவரையும் மீட்க டிராகன் செயற்கைகோளுடன் பால்கன் 9 ராக்கெட் அதிகாலை நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட் இன்று இரவு சுமார் 11:30 மணியளவில் விண்வெளி நிலையத்திற்கு சென்றடையும். பின் வரும் மார்ச் 19, 2025 அன்று இருவரும் பூமிக்கு திரும்புவார்கள். இவர்களுடன் நாசா விஞ்ஞானி நிக் ஹேக், ரஷிய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஆகியோரும் பூமிக்கு வருகின்றனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை: மோட்டோரோலா போன் புக் செய்தவருக்கு டவ் சோப் டெலிவரி.. பிளிப்கார்ட் ஆர்டர் பரிதாபங்கள்..!