முதல் ஐ-போன் உருவான ரகசியத்தை 15 ஆண்டுகள் கழித்து வெளியிட்ட வடிவமைப்பாளர்: என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க..!
முதல் ஐ-போன் உருவான ரகசியத்தை 15 ஆண்டுகள் கழித்து வெளியிட்ட வடிவமைப்பாளர்: என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க..!
முதல் ஐ-போன் குறித்து அதன் வடிவமைப்பாளர்களில் ஒருவரான கென் கெசிண்டா சில் ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரிஜினல் ஐபோனை 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார். ஐபோன் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆன நிலையில், அந்த முதல் ஐபோன் தான், ஸ்மார்ட் போன் கான்செப்ட்டின் ஆரம்பமாக இருந்தது என்று சொல்லலாம்.
மேலும் முதல் ஐபோன் விற்பனைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் மிகவும் புதுமையான ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருகிறது. மேலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு புதிய மாடல்களை உருவாக்கி வருகின்றன.
முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரிஜினல் ஐபோன், ஒரு புதுமையான தயாரிப்பாக இருந்தாலும், அதில் கட், காப்பி, பேஸ்ட் செய்யும் ஆப்ஷன் இல்லை. இதுகுறித்து ஆப்பிளின் முதல் ஐபோன் தயாரிப்பதில் பணியாற்றிய கென் கெசிண்டா என்கின்ற இன்ஜினியர் அதற்கான உண்மை காரணத்தை 15 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியுள்ளது.
முதல் ஐ-போன் உருவாக்கும்போது காப்பி பேஸ்ட் செய்யும் அப்ஷன்களை அதில் புகுத்த எங்களுக்கு போதுமான அவகாசமில்லை. ஐபோன் கீபோர்டு ஆட்டோ கரெக்ஷன் மற்றும் டெக்ஸ்ட் சிஸ்டத்தில், வேலை செய்வதில் மிகவும் கவனமாக இருந்தோம். வடிவமைப்பு செய்யும் குழுவினருக்கு கூட அதை செயல்படுத்த நேரம் இல்லை.
அதனால் தான் கட், காபி, ஃபேஸ்ட், ஆப்ஷன் ஆப்பிளின் முதல் ஐபோனில் இடம்பெறவில்லை. பின்னரே காப்பி, பேஸ்ட் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.