லாக்கப் அருகே ஒரு பெண் காவலர் செய்யும் காரியமா இது- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!
tik tak-pen police
இன்று டிக் டக் செயலியானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கி வைத்துள்ளது என்றே கூறலாம். இந்த செயலிக்கு அடிமையாகி சிலர் தங்களது உயிரையும் விடுத்துள்ளனர்.ஒரு சிலரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதற்கு இந்த செயலியே முக்கியமான காரணமாக அமைகிறது.
குஜராத் மாநிலம் மெஹசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் அர்பிதா சௌத்ரி என்னும் பெண் காவலர். இவர் தனது தொலைபேசியில் உள்ள டிக் டக் செயலியின் மூலம் காவல் நிலையத்தின் லாக்-அப் அருகே நின்று, சீருடை இல்லாமல் சாதாரண உடையில் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் அர்பிதா சௌத்ரி இடை நீக்கம் செய்துள்ளார்.மேலும் அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். அதாவது காவலர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகளை மீறியுள்ளார். எனவே அவரை இடை நீக்கம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.