×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாட்சப் பயன்படுத்துறீங்களா? அசத்தலான ஐந்து வாட்ஸ் ஆப் டிப்ஸ்! இப்போவே படிங்க!

Top five important whatsapp tips for all whatsapp users

Advertisement

சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது whatsapp தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு  தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.

அதுமட்டும் இல்லாமல் புகைப்படம், வீடியோ, பைல்கள் என அனைத்தையும் எளிதாக மற்றவர்களுடன் பகிர வாட்சப் வழிவகுக்கிறது. அத்தகைய வாட்ஸப்பில் உங்களுக்கே தெரியாமல் சில ஈஸியான ட்ரிக்ஸ் உள்ளது. அது என்னனு பாக்கலாம் வாங்க.

1 . ஒரே போனில் இரண்டு வாட்சப்
நம்மில் பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசி எண்கள் உள்ளது. நம்மிடம் எத்தனை நம்பர் இருந்தாலும் ஒரு போனில் ஒரு வாட்ஸாப்த்தான் பயன்படுத்த முடியும். ஒருவேளை உங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வாட்சப் அக்கவுண்ட் தேவைப்பட்டால் Switch Me என்ற செயலி மூலம் நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட அக்கவுண்ட்டை பயன்படுத்த இயலும்.

2 . டெலிட் செய்த செய்திகளை மீட்க
ஒருவேளை உங்கள் பழைய செய்திகள் அழிந்துவிட்டாலோ, அல்லது நீங்கள் தெரியாமல் டெலிட் செய்துவிட்டாலோ உங்கள் செய்திகளை மீட்க எளிதான வழி உள்ளது. உங்க எஸ்டி கார்டு சென்று வாட்ஸ் ஆப் - டேட்டாபேஸ் இல் நீங்கள் டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இருக்கும்.

3 . ஆட்டோ இமேஜ் டவுன்லோடு
உங்கள் வாட்ஸப்பில் நீங்கள் டவுன்லோடு செய்யாமலையே உங்கள் எண்ணிற்கு வரும் வீடியோ, புகைப்படங்கள் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்டால் அதை எளிதாக தடுக்கலாம். செட்டிங்ஸ் - சாட் செட்டிங்ஸ் - மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

4 . வாய்ஸ் நோட்டிபிகேஷன்
உங்களுக்கு வரும் வாட்சப் செய்திகளை உங்களுக்கு படிக்க நேரம் இல்லை என்றால், வாய்ஸ் ஃபார் நோட்டிபிக்கேஷன் வசதியை நீங்கள் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். இதன்மூலம் உங்களுக்கு வெறும் செய்தி தானாகவே படித்து காண்பிக்கப்படும்.

5 . புது வாட்சப் நம்பர்
ஒருவேளை உங்கள் வாட்சப் நம்பரை மாற்ற நினைத்தால், உங்கள் போனில் இருக்கும் பழைய செய்திகள் அழிந்துவிடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Whatsapp updates #Whatsapp #Whatsapp tricks in tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story