×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாட்ஸ் ஆப்பில் திடீரென அதிரடி மாற்றம்! என்ன காரணம்?

Whats app changes

Advertisement

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சில அரசு, தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறையும், சில நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து பணி பணியை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தபடி மொபைல் டேட்டாவையே பயன்படுத்தி வருகின்றனர். பலர் வேலையில்லாமல் வீடுகளில் முடங்கியபடி மொபைல் டேட்டாவை பயன்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் டேட்டா வேகம் வெகுவாக குறைந்து வருவதாக மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தெரிவித்தது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் தனது வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வீடியோக்கள் 30 வினாடிகள் வரை வைக்கலாம் என இருந்தது.ஆனால் தற்போது 15 வினாடிகள் மட்டுமே வாட்சாப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் வைக்கமுடியுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் சர்வர் தங்குதடையின்றி இயங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாட்ஸ் ஆப் மூலம் போலி செய்திகள் எதுவும் பரவாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாரும் வீண் வதந்திகளை கிளப்பி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#whats app #Changes
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story