வாட்ஸ்-ஆப்பில் வந்துவிட்டது புதிய வசதி! இனி அந்த கவலையே தேவையில்லை
Whatsapp new dark mode
பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான வாட்ஸ்-ஆப்பில் தற்போது டார்க் மோட் எனப்படும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியால் கண்களுக்கு வலி ஏற்படுவதை தடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டார்க் மோட் வசதியானது ஏற்கனவே பல செயலிகளிலும் ஐஓஎஸ் மொபைல் போன்களிலும் வந்துள்ளது. தற்போது இந்த வசதி வாட்ஸ்-ஆப் வெர்ஷன் 2.20.30ல் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியை பெற முதலில் ப்ளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ்-ஆப்பினை அப்டேட் செய்ய வேண்டும். பின்னர் வாட்ஸ்-ஆப்பில் உள்ள செட்டிங்க்ஸ் ஆப்ஷனுக்கு சென்றால் சாட்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும்.
அதற்கு பின்னர் புதிதாக தீம்ஸ் என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதற்குள் டார்க், லைட் என்ற இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் டார்க் ஆப்ஷனை தேர்வு செய்தால் வாட்ஸ்-ஆப்பின் தீம்ஸ் முற்றிலும் டார்க் மோடிற்கு மாறிவிடும்.