அதிர்ச்சி! உலகம் முழுவதும் வாட்ஸப்பில் வருகிறது அதிரடி கட்டுப்பாடு!
Whatsapp sets forward limit for entire world
சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது whatsapp தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் புகைப்படம், வீடியோ, பைல்கள் என அனைத்தையும் எளிதாக மற்றவர்களுடன் பகிர வாட்சப் வழிவகுக்கிறது. என்னதான் வாட்சப் மக்களுக்கு பயனுள்ள செயலியாக இருந்தாலும், அதுவே சில சமயங்களில் எமானாகவும் மாறிவிடுகிறது.
சில சமயங்களில் வாட்சப் மூலம் தேவை இல்லாத வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதன் மூலம் பல்வேறு உயிரிழப்புகள், தேவை இல்லாத அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸப்பில் வந்த செய்தியை நம்பி ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இதுபோன்ற சமபவங்களை தடுக்க இந்திய அரசு வாட்சப் நிறுவனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன் முதற்கட்டமாக வாட்ஸப்பில் பார்வேர்ட் செய்யப்படும் செய்திகளை பார்வேர்ட் செய்தி என வாட்சப் காட்ட ஆரம்பித்தது. இதன் அடுத்த கட்டமாக, ஒரு செய்தியை 5 நபர்களுக்கு மட்டுமே பார்வேர்ட் செய்யமுடியும் என்ற கட்டுப்பாட்டை இந்தியாவில் மட்டும் நடைமுறைக்கு கொண்டுவந்தது வாட்சப் நிறுவனம்.
இந்த புதிய கட்டுப்பாட்டால், தேவை இல்லாத வதந்திகள் பரப்படுவது குறைந்துள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக உலகம் முழுவதும் பார்வேர்ட் லிமிட்டை கட்டாயமாகவுள்ளது வாட்சப். இனி இந்தியாவில் மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் வாட்ஸப்பில் 5 நபர்களுக்கு மேல் ஒரு செய்தியை பார்வேர்ட் செய்ய இயலாது.