நமது கண்ணிற்கு தெரியாத ஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா? இத படிங்க!
Why cameras captures ghosts details in tamil
ஆவி, பேய் போன்றவற்றிக்கு பயப்படாதவர்கள் மிகவும் குறைவு. சிலருக்கு ஆவி, பேய் என்று சொன்னாலே பயம் வந்துவிடும். அந்த அளவிற்கு சிலர் பயப்புடுவார்கள். சிலர் நான் பேயை பார்த்துளேன், ஆவியை பார்த்துளேன் என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நம்மில் பலரும் பார்த்ததில்லை. ஆனால் புகைப்படத்தில் பேய் இருப்பதுபோன்றும், பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளில் பேய் இருப்பது போன்றும் ஏகப்பட்ட காட்சிகளை நாம் பார்த்திருப்போம்.
இவை அனைத்தும் உண்மையா? என்ன சொல்கிறது விஞ்ஞானம்? வாங்க பாக்கலாம். பொதுவாக புகைப்படங்களை பதிவு செய்ய அணைத்து கேமிராவில் சென்சார் இருக்கும். இந்த சென்சார் ஒவொரு புகைப்படங்களையும் பதிவு செய்ய, அதாவது புகைப்படத்தை ப்ராசஸ் செய்ய சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும். அதுபோன்ற சமயங்களில் ஏற்படும் விளைவுகள்தான் புகைப்படத்தில் பேய் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் இமேஜ் அலியசிங் (image aliasing) எனபது புகைப்பட சிதைவு போன்ற காரணங்களாலும் இதுபோன்ற புகைப்படங்கள் உருவாவது உண்டு. ஸ்டீரியோஸ்கோபி மாயையை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஆவிகள் மற்றும் பேய்கள் போன்ற உருவங்கள் சிக்குவது வழக்கமானது தான்.
டபுள் எக்ஸ்போஷர் எனப்படும் சிறப்பு விளைவை உருவாக்க வேண்டுமென்று எடுக்கப்படும் புகைப்படங்களிலும் ஆவிகள் மற்றும் பேய்களை உருவாக்கலாம்.
இதற்காக உண்மையில் பேய்கள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் இல்லை என கூறிவிட முடியாது. ஆனால் தொழில்நுட்பங்களால் இது போன்ற அமானுஷ்யங்களை உருவாக்க முடியும்.