கணேச ஜெயந்திக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?
Difference between vinayagar chathurthi and kanesa jayanthi
கணேச ஜெயந்தி அல்லது மகா சுக்கில சதுர்த்தி (Ganesh Jayanti) என்பது இந்துக் கடவுளான விநாயகரின் பிறந்தநாளைக் குறிக்கும் தினமாகும். இது தில்குந்த சதுர்த்தி என்றும் வரத சதுர்த்தி எனவும் அழைக்கப்படுகின்றது.
கணேச ஜெயந்தி விரதாமாகவும் பண்டிகையாகவும் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடத்திலும் மாசி மாதத்தில் வரும் சுக்கில பட்ச சத்துர்த்தியில் கணேச ஜெயந்தி அனுட்டிக்கப்படுகின்றது.
இது இந்திய மாநிலங்களான மகாராட்டிரா மற்றும் கோவாவிலும் பெரும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது. பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட விநாயக சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாளாகவே கொண்டாடப்படுகிறது.
மாசி மாதத்தில் கொண்டாடப்படுவது கணேச ஜெயந்தி எனவும், ஆவணி மாதத்தில் கொண்டப்படுவது விநாயகர் சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு.