விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நீங்கள் எண்ணலாம் செய்யணும் தெரியுமா?
What are the things need to do on vinayagar chathurthi
பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர்.
ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் அதிகாலையில் எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு விநாயகரின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.