சேலை அணிந்து பேட்டிங் செய்த முன்னணி இந்திய வீராங்கனை..! வைரலாகும் வீடியோ.!
Mithali raj playing cricket with saree video goes viral

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான மித்தாலி ராஜ் சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், உலக மகளிர் தினம் வரும் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இருக்கும் நிலையில், பெண்களின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக சேலை அணிந்து கொண்டு மிதாலி ராஜ் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ விளம்பரம் ஒன்றுக்காக எடுக்கப்பட்டதாகவும், மகளிர் தினத்தை முன்னிட்டு அதிகாரபூர்வமாக வெளியாக இருப்பதாகவும், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் மிதலி ராஜ் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.