கனமழை.. புயல் சீற்றம்.. பறிபோன 14 உயிர்கள்.! இன்னமும் நிற்காத மழை.!
கனமழை.. புயல் சீற்றம்.. பறிபோன 14 உயிர்கள்.! இன்னமும் நிற்காத மழை.!
கடந்த சனிக்கிழமை இரவு முதல் அர்ஜென்டினாவில் 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வேசி வருகிறது. அத்துடன் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. அப்போது பஹியா பிளான்காவில் உள் விளையாட்டு அரங்கில் சறுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வந்தது. திடீரென ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக அதிக காற்று வீசியது.
இதில் விளையாட்டு அரங்கத்தின் சுவரானது இடிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக பல பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த அதிபர் அமைச்சர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து பாதிப்பு நிலவரங்களை ஆராய்ந்தார். அப்பகுதியில் நடக்கப்பட வேண்டிய மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.
இந்த நிலையில் மோர்னோ நகரில் ஒரு பெண் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார். அர்ஜெண்டினாவில் ஏற்பட்டுள்ள கடும் புயல் மற்றும் கனமழையின் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். அர்ஜென்டினா மட்டுமல்லாமல் அருகில் உள்ள நாடுகளும் புயல் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றது.