சிறையில் ஆண் கைதிகளுடன் உல்லாசம் ... சிக்கிய 18 பெண் போலீசார்...!!
சிறையில் ஆண் கைதிகளுடன் உல்லாசம் ... சிக்கிய 18 பெண் போலீசார்...!!
இங்கிலாந்தின் எச்எம்பி பெர்வின் சிறைச்சாலையில் சுமார் 2,100 ஆண் கைதிகள் உள்ளனர். இந்த சிறைச்சாலையில் 500 போலீசார் பாதுகாப்புப் பணிக்காக உள்ளனர். இவர்களில் சில பெண் போலீசார், ஆண் கைதிகளுடன் பாலியல் ரீதியான உறவில் இருந்துள்ளனர்.
சிலரின் நெருக்கமான புகைப்படங்கள் வெளியானதைத் அடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில்,18 பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 15 பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளனர். விசாரணையில், கைதிகள் இருக்கும் செல்லின் உள்ளே பாலியல் தொடர்பில் ஈடுபட்டது, செல் போன்களில் நெருக்கமாக பேசுவது, புகைப்படங்களை அனுப்புவது போன்ற விவரங்கள் வெளியில் வந்துள்ளன.
எச்எம்பி பெர்வின் என்ற மிகப் பெரிய சிறைச்சாலை இது போன்ற சம்பவம் நடந்தது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளதாகி உள்ளது. தொடர்ந்து, இந்த சிறைச்சாலை கைதிகளுக்குத் தண்டனை வழங்கும் இடம் போல் இல்லாமல் வசதியாகச் சொகுசாக வாழும் இடமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.