×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2-வதாக வான்பரப்பில் காணப்பட்ட மற்றொரு மர்ம பொருள்; சுட்டு வீழ்த்திய அமெரிக்கா...!

2-வதாக வான்பரப்பில் காணப்பட்ட மற்றொரு மர்ம பொருள்; சுட்டு வீழ்த்திய அமெரிக்கா...!

Advertisement

சீன உளவு பலூனை தொடர்து வான் பரப்பில் நுழைந்த மற்றொரு மர்ம பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. 

கடந்த 30-ஆம் தேதி அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் இருக்கும் அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பல ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளை நிறத்தில் மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது. 

அது சீன உளவு பலூன் என்பது தெரியவந்தது. அணு ஆயுத ஏவுதளத்தின் ரகசிய தகவல்களை சேகரிக்க இந்த ரகசிய உளவு பலூனை சீனா அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

வர்த்தக ரீதியிலான விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு அதிகமான உயரத்தில் அந்த உளவு பலூன் பறந்தது. எனவே இந்த பலூன் அமெரிக்க பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியது.

இதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன உளவு பலூனை, அமெரிக்க போர் விமானங்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தின. சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. 

அட்லாண்டிக் கடலில் விழுந்த பலூனின் பாகங்களை சேகரித்த அமெரிக்கா பலூன் குறித்து ஆய்வு செய்து வருகிறது. வானிலை ஆய்வுக்காக அந்த பலூன் அனுப்பட்டதாக சீனா கூறியது. இந்த நிலையில், அமெரிக்கா, சீனா இடையே மோதல் நீடித்து வருகிறது.

சீன உளவு பலூனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் வான்பரப்பில், வானில் 40 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு சிறிய காரின் அளவிலான மர்ம பொருள் பறந்து கொண்டிருந்தது. 

கண்காணிப்பு ரேடாரில் இந்த மர்ம பொருள் தென்பட்ட நிலையில் அமெரிக்க வான்பரப்பு உஷார்படுத்தப்பட்டது. அந்த மர்ம பொருள் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் எழுந்ததையடுத்து அதை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். 

ஜோபைடனின்  உத்தரவை தொடர்ந்து, மர்ம பொருளை இன்று போர் விமானங்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தின. மர்ம பொருளின் சிதைந்த பாகங்கள் அலாஸ்காவின் உறைந்த ஆற்றுப்படுகையில் விழுந்துள்ளன. 

அந்த மர்ம பொருளின் பாகங்களை சேகரித்து அது எங்கிருந்து வந்தது. அதை  யார் அனுப்பியது, அதன் நோக்கம் போன்ற, பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #America #Mysterious Object Seen in the Sky #America shot down
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story