கடையில் பொருட்களை திருடியதாக அமெரிக்காவில் 2 இந்திய மாணவிகள் கைது..!
கடையில் பொருட்களை திருடியதாக அமெரிக்காவில் 2 இந்திய மாணவிகள் கைது..!
கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் செயல்பட்டு வரும் தனியார் பல்பொருள் அங்காடியில் 2 பெண்கள் சில பொருட்களை திருடியதாக தெரியவந்தது.
இந்த விஷயம் தொடர்பான சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்த்தில் உள்ள குண்டூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வரும் இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அதிகாரிகள் 600 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.50,148) அபராதம் விதித்துள்ளனர். இருவரும் அங்கு மேற்படிப்பு பயிலும் 20 வயது 22 வயது மாணவிகள் ஆவார்கள்.