நடுவானில் பிரசவம்.. குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பிஞ்சு.. 20 வயது தாயின் பதறவைக்கும் செயல்.!
நடுவானில் பிரசவம்.. குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பிஞ்சு.. 20 வயது தாயின் பதறவைக்கும் செயல்.!
விமான கழிவறை குப்பைத்தொட்டியில் இருந்து பிறந்த பச்சிளம் குழந்தை விமான நிலைய அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மடகாஸ்கர் நாட்டினை சார்ந்த 20 வயது பெண்மணி, ஏர் மொரிசியஸ் விமானம் மூலமாக மடகாஸ்கரில் இருந்து மொரீஷியஸில் நாட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். விமானம் சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பயந்துகொண்டு இருக்கும் போது, பெண்மணி கழிவறைக்கு சென்று குழந்தையை பிரசவித்து, அருகே இருந்த குப்பைத்தொட்டியில் குழந்தையின் உடலை போட்டுவிட்டு வந்துள்ளார்.
விமானம் மொரிஷியஸ் நாட்டில் தரையிறங்கிய நிலையில், விமான பயணிகள் அனைவரும் இறங்கியதும் விமான பராமரிப்பு அதிகாரிகள் குழந்தையை மீட்டெடுத்துள்ளனர். இதனையடுத்து, குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், விமான நிலையத்திலேயே 20 வயது பெண்ணை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.
முதலில் குற்றசாட்டை ஒப்புக்கொள்ள மறுத்த பெண்மணி, குழந்தை எனக்கு பிறந்தது தான் என வாக்குமூலம் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, அவரையும் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பிய அதிகாரிகள், விசாரணைக்காக தங்களின் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர். தாயும் - சேயும் மருத்துவமனையில் நலமுடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.