அம்மாடியோ... 20 கோடியாம் அப்பு... காகேசியன் ஷெப்பர்டு இன அரிய வகை நாயை வாங்கிய தொழில் அதிபர்!!
அம்மாடியோ... 20 கோடியாம் அப்பு... காகேசியன் ஷெப்பர்டு இன அரிய வகை நாயை வாங்கிய தொழில் அதிபர்!!
இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும், பெங்களூருவில் உள்ள கடபோம்ஸ் கென்னல்ஸ் என்ற நாய் விற்பனை கடையின் உரிமையாளராக இருப்பவர் தொழிலதிபர் சதிஷ். இவர் அரிய வகை நாய்களை வாங்கி வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் தற்போது 20 கோடி ரூபாய் கொடுத்து காகேசியன் ஷெப்பர்டு என்ற இன நாயை வாங்கியுள்ளார்.
இந்த நாய் இந்தியாவில் காண்பது என்பது அரிதல்ல. இந்த நாய்கள் பெரும்பாலும் ரஷியா, துருக்கி, சிர்கசியா, ஜார்ஜியா ஆகிய நாடுகளில் தான் அதிகம் காணப்படும். காகேசியன் ஷெப்பர்டு நாய்கள் மிகவும் தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை, அறிவுத்திறன் கொண்டவையாக இருக்கும்.
இந்த நாயை தொழிலதிபர் சதிஷ் ஐதராபாத்தை சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து தான் சதீஷ் இந்த நாயை வாங்கி உள்ளாராம். அந்த நாய்க்கு தற்போது 1½ வயது தான் ஆகிறதாம். மேலும் நாய்க்கு கடபோம் ஹைடர் என்றும் சதீஷ் பெயர் சூட்டி உள்ளார்.