வளர்க்கவும் கஷ்டமா இருக்கு... விடவும் மனசு வரல...! பெண்மணி ஒருவரின் நிலையை பாருங்கள்!!
வளர்க்கவும் கஷ்டமா இருக்கு...விடவும் மனசு வரல...! பெண்மணி ஒருவரின் நிலையை பாருங்கள்! வைரல் வீடியோ...
நாம் அனைவரும் செல்லமாக வீட்டில் பல செல்ல பிராணிகளை வளர்ப்போம். ஆனால் இங்கு பெண்மணி ஒருவர் செல்லமாக 250 கிலோ எடையுள்ள பன்றியை வளர்த்து வருகின்றார்.
பிரேசில் நாட்டின் சாவோபாலோ கடற்கரைப் பகுதியில் உள்ள பெருயிப் நகரில் ரோசாங்கலா டியில் லாரா என்ற பெண் வசித்து வந்துள்ளார். அந்த பெண்மணி 250 கிலோ எடையுள்ள பன்றி ஒன்றை செல்லமாக தன் வீட்டில் வளர்த்து வருகிறார். தற்போது அந்த பன்றிக்கு 3 வயதாகிறதாம். அந்த பன்றிக்கு லிலிகா என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் அந்த பன்றி, ஒரு நாளைக்கு மட்டும் 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர தீனியை உண்பதாக அதை வளர்க்கும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிய வகை பன்றி என நினைத்து அதை வாங்கியதாகவும், அதை வளர்க்க ஆகும் அன்றாட செலவு மிக அதிகமாக இருந்தாலும், அதன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளதால் அதை விற்பனை செய்ய தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார். இருப்பினும் இந்த பன்றிக்கு அந்த பெண் சக்தியை மீறி செலவு செய்ய வேண்டிய நிலை வந்ததால் கடும் சோகத்தில் சோஷியல் மீடியாவில் கண்ணீர்விட்டிருப்பது நெட்டிசன்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.