×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா... 3600 ஆண்டுகளுக்கு முன்பே லிப்ஸ்டிக்..! ஈரானில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான லிப்ஸ்டிக்.!

அடேங்கப்பா... 3600 ஆண்டுகளுக்கு முன்பே லிப்ஸ்டிக்..! ஈரானில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான லிப்ஸ்டிக்.!

Advertisement

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தென்கிழக்கு ஈரானில் உள்ள கெர்மன் மாகாணத்தின் ஜிரோஃப்ட் பகுதியில் 3600 ஆண்டுகள் பழமையான சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இதுதான் பழமையானது என நம்பப்படுகிறது.

இது நவீன கால லிப்ஸ்டிக்கை போன்று குப்பியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 2001 ஆம் வருடம் ஹலீல் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கிமு 3 ஆம் மில்லினியத்தைச் சேர்ந்த பல கல்லறைகள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. அப்போது பல கலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது பல பொருட்கள் உள்ளூர் வாசிகளால் கொள்ளையடிக்கப்பட்ட போதும் இந்தப் பழங்கால லிப்ஸ்டிக் அருங்காட்சியகத்தை சென்றடைந்தது.

3600 ஆண்டுகளுக்கு முந்தைய லிப்ஸ்டிக் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இது ஹெமாடைட் தாதுவை கொண்டு உருவாக்கப்பட்டு மாங்கனைட் மற்றும் ப்ரானைட்டால் கருமையாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவற்றில் மெழுகு போன்ற சிறிய அளவிலான கலேனா மற்றும் ஆங்கிள்சைட் ஆகியவையும் கலந்து இருக்கிறது. 3600 ஆண்டுகளுக்கு முந்தைய லிப்ஸ்டிக் தயாரிப்பு முறையும் தற்காலிக லிப்ஸ்டிக் தயாரிப்பு முறையை போன்று இருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல கொள்ளையடிப்புகள் நடைபெற்று இருப்பதால் லிப்ஸ்டிக் தோன்றிய இடம் பற்றி சரியாக கூற முடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது உலோக நாகரீக காலத்தில் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தப் பழமையான லிப்ஸ்டிக்கின் கண்டுபிடிப்பாளர் யார் மற்றும் இந்த லிப்ஸ்டிக் முதல் முதலாக பண்டைய ஈரானில் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது பற்றி தெளிவான ஆதாரங்கள் இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

3600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான லிப்ஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தொல்பொருள் ஆய்வில் முக்கியமான கண்டுபிடிப்பை  பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல் பண்டைய சமூகங்களில் இருந்த ஒப்பனை நடைமுறைகளை நமக்கு காட்சிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார வரலாற்றின் வெளிப்பாட்டில் அழகு கலையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#lipstick #iran #3600 year old lip stick #Bronze Age Civilization #Oldest Lipstick
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story