மைதானத்தில் சுருண்டு விழுந்த 6 வயது மகன்... தாயின் செயலால் உயிர்பிழைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.!!
மைதானத்தில் சுருண்டு விழுந்த 6 வயது மகன்... தாயின் செயலால் உயிர்பிழைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.!!
அமெரிக்காவைச் சார்ந்த 6 வயது சிறுவனுக்கு விளையாட்டு மைதானத்தில் வைத்து மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிறுவனின் தாயார் முதலுதவி சிகிச்சை அளித்து மகனின் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வு சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஆஸ்கார் ஸ்டூப். இவர் தனது சகோதரனின் பேஸ்பால் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தை பிடிக்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து இவரது நெஞ்சில் தாக்கியது. இதனால் சிறுவன் ஆஸ்கார் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தான்.
இதனைத் தொடர்ந்து துணை மருத்துவக் குழு மைதானத்திற்கு வந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் ஆஸ்கார் நன்றாக குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறான். சிறுவனுக்கு அடிப்பட்டு மயங்கி விழுந்த போது தனக்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை பற்றி தெரிந்ததால் மகனின் உயிரை காப்பாற்றியதாக சாரா உருக்கமுடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் அனைவரும் முதலுதவி சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் பதிவிட்டுள்ளார்.